Home Featured நாடு சரவாக் தேர்தல்: ஜசெக 29 இடங்களில் போட்டி!

சரவாக் தேர்தல்: ஜசெக 29 இடங்களில் போட்டி!

578
0
SHARE
Ad

chong-300x180கோலாலம்பூர் – அடுத்தமாதம் நடைபெறவுள்ள சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் 29 இடங்களில் போட்டியிடவுள்ளதாக ஜசெக அறிவித்துள்ளது.

இது குறித்து சரவாக் ஜசெக தலைவர் சோங் சியங் ஜென் கூறுகையில், 29 தொகுதிகளில், 15 தொகுதிகளில் டயாக்சுக்கும், 13 தொகுதிகள் சீனர்களுக்கும் மற்றும் 1 தொகுதி மலாய்காரர்களுக்கும் வழங்கப்படும் என்று இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

டயாக்ஸ் தொகுதிகளில் பிடாயு, இபான் மற்றும் ஓராங் உலு ஆகிய இனங்களைச் சேர்ந்த மக்களும் அடங்குவர் என்றும் சோங் சியங் ஜென் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

வரும் ஏப்ரல் 20-ம் தேதி ஜசெக தனது வேட்பாளர்களை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.