Home Featured தமிழ் நாடு ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுகவின் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்!

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுகவின் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்!

730
0
SHARE
Ad

jaya kushbooசென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில்  சிம்லா முத்துசோழன்  போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக முதல்வர் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே, அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவது யார்  என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், திமுக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து சிம்லா முத்துசோழன் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்லா முத்துசோழன் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள். திமுகவின் வழக்கறிஞர் அணியில்  இருக்கிறார். அத்தோடு மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளராக  பதவி வகித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

மேலும்,இவர் திமுகவில் போட்டியிட அளித்த விருப்ப மனுவில், ராயபுரம் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு விருப்பம் தெரிவித்து  மனு அளித்து இருந்தார். மனுவைப் பரிசீலித்த திமுக தலைமை, ஆர்.கே.நகரை தெரிவு செய்து அளித்துள்ளது.