Home Featured நாடு மொராயிஸ் இறப்பு தற்கொலையாக இருக்கலாம் – எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதம்!

மொராயிஸ் இறப்பு தற்கொலையாக இருக்கலாம் – எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதம்!

878
0
SHARE
Ad

Kevin Moraisகோலாலம்பூர் – அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என எதிர்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

மூச்சுத்திணறலால் தான் கெவின் மொராயிஸ் இறந்துள்ளார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவரது மூச்சுத்திணறலுக்கான காரணம் என்னவென்று உறுதிசெய்யப்படாததால் அவர் இந்தக் கூற்றை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

அவரது இறப்பு (கெவின் மொராயிஸ்), “பிளாஸ்டிக் பை மூச்சுத்திணறல் தற்கொலை” ஆக இருக்க வாய்ப்பு உள்ளதா? என்று சட்ட ஆலோசகர் டத்தோ கீதன் ராம் வின்செண்ட் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தடவியல் நிபுணர் நூர்லிசா அப்துல்லா, தனது அனுபவத்தில் 4.500 வழக்குகளைச் சந்தித்திருப்பதாகவும், அவற்றில் இரு வழக்குகளில் மட்டுமே பிளாஸ்டிக் பேக் மூச்சுத்திணறலால் ஏற்பட்ட தற்கொலைகளைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த புதன்கிழமை, தடவியல் நிபுணர் நூர்லிசா அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில், பிளாஸ்டிக் பை போன்ற பொருட்களால் கெவின் மொராயிஸ் மூச்சுத்திணறடிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்றும், நெஞ்சு மற்றும் விலா பகுதியில் ஏற்பட்ட அழுத்தத்தினால் இறந்திருக்கலாம் என்றும் இரு கூற்றுக்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.