கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம், இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியதாவது:
“சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு மே மாதம் 10-ஆம் தேதிக்குள் வர வாய்ப்புள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறை செல்வது உறுதி. தமிழக தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட மேலிடம் உத்தரவிட்டால், கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்” என சுப்பிரமணியசாமி கூறினார்.
Comments