ஒட்டாவா – தீராத நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் வயது மூப்பு சார்ந்த பிரச்சினைகளால் படுத்த படுக்கையாக கிடப்பவர்கள், கருணை அடிப்படையில் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்புதல் வழங்கும் சட்ட மசோதாவுக்கு கனடா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரை திட்டமிட்டு முடிவடையச் செய்தல், வதையா இறப்பு அல்லது கருணைக் கொலை (Euthanasia) என்பதாகும். நோயாளியின் விருப்பத்தின் பேரில், மருத்துவரின் உதவியுடன் தன்வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவதால் இதற்கு உதவி செய்யப்பட்ட தற்கொலை என்ற பெயரும் உண்டு.
நோயாளியின் விருப்பத்தைப் பெற இயலாத நேரத்தில் (உயிரை பாதிக்கும் நோயுடன் பிறந்துள்ள குழந்தை, ஆண்டுக்கணக்கில் ஆழ்மயக்கத்தில் இருக்கும் நபர்) இதனை கருணைக் கொலை என்றும் கூறுவர். தற்போது இந்த கருணை அடிப்படையில் தற்கொலை செய்துகொள்வதற்கு கனடா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.