மேலும் இதில் முதன்முறையாக கமலின் மகள் ஸ்ருதி ஹாசனும் இந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் தொடக்க விழாவை நடிகர் சங்க கட்டிடம் இருந்த இடத்தில் நடத்த இருக்கிறார்கள்.
இதுகுறித்து கமல் கூறும்போது, ‘எங்களுடைய ராஜ் கமல் பிலிமின் 41 ஆவது படத்தின் தொடக்கவிழாவை எங்கள் குடும்ப இடமான நடிகர் சங்க மைதானத்தில் நடத்த இருக்கிறோம்’ என்றார். நடிகர் சங்க நிலத்தில் விழா நடக்க இருப்பதால் நடிகர் சங்க நிர்வாகிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நடிகர் பட்டாளம் விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.