Home Featured நாடு பெசுட்டில் நடைபெறவுள்ள ‘முழுநிலவு கடற்கரைக் கொண்டாட்டத்திற்கு’ எதிராக அப்பகுதியினர் புகார்!

பெசுட்டில் நடைபெறவுள்ள ‘முழுநிலவு கடற்கரைக் கொண்டாட்டத்திற்கு’ எதிராக அப்பகுதியினர் புகார்!

496
0
SHARE
Ad

Besutபெசுட் – வரும் ஏப்ரல் 19 மற்றும் 20 -ம் தேதிகளில் புலாவ் பெர்ஹெண்டியான் கெச்சில் அருகே, நடைபெறவுள்ள ‘முழு நிலவு கடற்கரைக் கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த அம்னோ இளைஞர் பிரிவு, புத்ரி கிளைகள் மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்புகள் இந்தப் புகாரை இன்று காவல்துறையில் பதிவு செய்துள்ளனர்.

அது போன்ற கொண்டாட்டங்களின் போது, மது, தவறான செய்கைகள் மற்றும் ஆண்-பெண் உடலுறவு உள்ளிட்டவை இருக்கக்கூடும் என்று தாங்கள் அஞ்சுவதாகவும், குறிப்பாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர்கள் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice