Home Featured தமிழ் நாடு உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் விஜயகாந்த்!

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் விஜயகாந்த்!

587
0
SHARE
Ad

vijayakaanthசென்னை – வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு தொகுதிகளில் விஜயகாந்த் போட்டியிட்டு வருகிறார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 2011-ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டார்.

நடப்பாண்டின் சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். விஜயகாந்த் தற்போது போட்டியிட உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ம.க கட்சிகள் களத்தில் உள்ளன.