Home Featured கலையுலகம் நான்கு நாட்களில் 55 கோடிகளை வசூலித்த ‘தெறி’!

நான்கு நாட்களில் 55 கோடிகளை வசூலித்த ‘தெறி’!

626
0
SHARE
Ad

theriசென்னை – விஜய் நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளிவந்த ‘தெறி’ படம் உலகம் முழுவதும் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது. படம் வெளியான நாள் முதல் இன்றுவரை திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாவே ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ‘தெறி’ வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.55 கோடி வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் செங்கல்பட்டு ஏரியாவில் இப்படம் வெளியாகவில்லை. அந்த ஏரியாவில் படம் வெளியாகியிருந்தால் வசூல் மேலும் சில கோடிகளை தாண்டியிருக்கும்.

இருப்பினும், தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், தற்போதைக்கும் எந்த பெரிய படங்களும் வெளியாகாததாலும் ‘தெறி’ படம் இன்னமும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. வரும் வாரங்களிலும் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.