Home Featured உலகம் கோகினூர் வைரம் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது – இங்கிலாந்து விளக்கம்!

கோகினூர் வைரம் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது – இங்கிலாந்து விளக்கம்!

553
0
SHARE
Ad

koh-i-noor-diamondசென்னை – பிரிட்டனில் உள்ள விலைமதிப்பற்ற கோகினூர் வைரத்தை மீளப்பெற்றுக் கொள்ள இந்தியா முயற்சிக்கக் கூடாது என்று இந்தியாவின் உச்சநீதிமன்றத்திடம் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. அந்த வைரம் பிரிட்டனால் திருடப்படவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் கூறுகின்றது.

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரிட்டனுக்குள் கொண்டுவரப்பட்ட இந்த வைரம், டவர் ஆஃப் லண்டனில் அரச குடும்பத்து ஆபரணங்களின் ஒருபகுதியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீளப்பெற்று வர வேண்டும் என்று கோரி சிவில் அமைப்பொன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்திருந்தது.

கோகினூர் வைரம், பஞ்சாபி மகாராஜா ரஞ்சித் சிங்கினால் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக இந்தியாவின் கலாசார அமைச்சு பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice