Home Featured தமிழ் நாடு திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்! (காணொளியுடன்)

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்! (காணொளியுடன்)

918
0
SHARE
Ad

durai muruganவேலூர் – நான் இறந்தபிறகு இந்தத் தொகுதிக்கு செய்தவற்றை எண்ணினால் அது ஒன்றே போதும் என, காட்பாடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன் பேசியதாவது:

இங்கு பேசிய பலரும் துரைமுருகனுக்கு எதற்கு அறிமுகக் கூட்டம் என்றனர். ஆண்டுதோறும் திருப்பதியில் நடக்கும் திருக்கல்யாண வைபவத்தை பார்க்காமலா இருக்கிறோம்? கட்சிக்கு புதிதாக வருபவர்கள் தெரிந்து கொள்ளத் தான் அறிமுகக் கூட்டம் நடத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதுவரையில் நான் வகிக்காத பதவி என்றால் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டும் தான். இந்தத் தொகுதிக்கு ஏராளமானவற்றை செய்து முடித்திருந்தாலும், எனது மனதில் ஒரு முள் தைத்துக் கொண்டிருக்கிறது.

இங்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வர வேண்டும் என்ற எனது முயற்சி ஆட்சி மாற்றத்தால் நடக்காமல் போனது தான் நெஞ்சில் குத்திக் கொண்டே இருக்கிறது. எனது தாயை நேசித்ததை விட இந்தத் தொகுதியைத் தான் அதிகம் நேசிக்கிறேன்.

கட்சியில் வேட்பாளரைத் தேர்வு செய்வதெல்லாம் கட்சித் தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் தான். நான் அருகில் நிற்பவன் மட்டுமே. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்னைத் திட்டுகிறார்கள், உருவப்பொம்மை எரித்ததாகக் கேள்விப் பட்டதும் இன்றுடன் திருஷ்டி கழிந்து விட்டது என தலைவர் கருணாநிதி கூறினார்.

கட்சிக்காக சுவரொட்டி ஒட்டியவன் என்னைத் திட்டக் கூடாதா, அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு நாள் நான் இறந்த பிறகு என்னைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது இந்தத் தொகுதிக்கு நான் செய்ததை நினைத்து கண்ணீர் சிந்துவீர்கள். அது ஒன்று போதும் எனக் கூறி விம்மியழுத்தார் துரைமுருகன்.