Home Featured நாடு குளிர்சாதன வசதிக்கு 10 ரிங்கிட்டா? – உணவுக்கடை ரசீதைக் கண்டு திடுக்கிட்ட வாடிக்கையாளர்!

குளிர்சாதன வசதிக்கு 10 ரிங்கிட்டா? – உணவுக்கடை ரசீதைக் கண்டு திடுக்கிட்ட வாடிக்கையாளர்!

600
0
SHARE
Ad

bill aircon circleகோலாலம்பூர் – பங்சாரில் உள்ள பிரபல உணவுக்கடை ஒன்றில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் கொடுத்த ரசீதைப் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

காரணம், அவர் சாப்பிட்ட உணவுகளுக்கான விலைப்பட்டியலின் கீழ், தனியாக குளிர்சாதன வசதிக்கென்று 10 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், உணவுக்கடை நிர்வாகத்துடன் நடந்த சில சச்சரவுகளுக்குப் பின்னர், தனக்கு விதிக்கப்பட்டிருந்த அந்த தனிக்கட்டணம் கழிக்கப்பட்டதாக அந்த வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டுமென்று, அந்த ரசீதை அவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துவிட, தற்போது மலேசியர்கள் மத்தியில் நட்பு ஊடகங்களில் அது தான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

அதை அறிந்த அவர், தான் அந்த உணவுக்கடையின் பெயரைக் களங்கப்படுத்துவதற்காக அவ்வாறு செய்யவில்லை என்றும், மற்ற உணவுக்கடைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டுமே என்று தான் பேஸ்புக்கில் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் மலேசியாவில் பலருக்கும் அதிர்ச்சியளிக்கலாம். ஆனால் அண்டை நாடான இந்தியாவில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால், அங்கு பல உணவுக்கடைகளில் குளிர்சாதன வசதிக்கென்று தனியாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.