நியூயார்க் – அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாநிலங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நியூயார்க் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. இதில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 65.1 சதவீதம் வாக்குகளை வாங்கி அமோக வெற்றி பெற்றார்.
அவரது போட்டியாளரான டெட் குருஸ் 13.7 சதவீதம் வாக்குகளை வாங்கி மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளார். 21.2 சதவீதம் வாக்குகளை வாங்கி இரண்டாவது இடத்தை ஓஹியோ மாநில கவர்னர் ஜான் காசிச் கைப்பற்றியுள்ளார்.
இதேபோல், குடியரசுக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 60.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அவரது போட்டியாளரான பெர்னி சான்டர்ஸ் 39.5 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஆவதற்கு 2,383 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற்றாக வேண்டும்.
இதுவரை பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் 1307 வாக்குகளை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகிக்கிறார். அவரது போட்டியாளராக உருவாகி வருகிற பெர்னி சாண்டர்ஸ் 1094 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தகுதிபெற மொத்தம் 1237 வாக்குகள் தேவை என்ற நிலையில், இதுவரை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட மாநிலங்களில் அதிக ஆதரவைபெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் 743 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அவரது போட்டியாளரான டெட் குருஸ் 543 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இனிமேல் ஆதரவு வாக்குப்பதிவை சந்திக்கவுள்ள மேலும் சில மாநிலங்களிலும் டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அதிகமான வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் நேருக்குநேர் மோதிக் கொள்வது இப்போதே உறுதியாகி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.