Home Featured இந்தியா எனது சொத்துக்கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை – விஜய் மல்லைய்யா!

எனது சொத்துக்கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை – விஜய் மல்லைய்யா!

456
0
SHARE
Ad

vijay-mallya-60புதுடெல்லி – இங்கிலாந்தில் உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லைய்யா தன் வெளிநாட்டு சொத்துக் கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லைய்யா இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், விஜய் மல்லைய்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள சொத்து கணக்கை வரும் 21-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

மேலும் செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.4 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தும் அவரது திட்டத்தையும் நிராகரித்து விட்டது. இந்நிலையில் விஜய் மல்லைய்யா சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தன்னுடைய வெளிநாட்டு சொத்துக்கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை என்று தெரிவித்துள்ளார்.

வங்கிகள் தனக்கு கடன் வழங்கும் போது வெளிநாட்டில் தனக்கு உள்ள சொத்துகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், எனவே தற்போது தன் வெளிநாட்டு சொத்துக்கணக்கை கேட்க வங்கிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.