Home Featured தமிழ் நாடு தொடர் விபத்துக்களால் ஜெயலலிதாவின் பிரச்சாரத் தேதிகள் மாற்றம்!

தொடர் விபத்துக்களால் ஜெயலலிதாவின் பிரச்சாரத் தேதிகள் மாற்றம்!

559
0
SHARE
Ad

jaya-admkசென்னை – தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. விழுப்புரத்தில் மே 3-ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 29-ஆம் தேதியே ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவின் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் 5 பேர் உயிரிழந்த நிலையிலும் நேரத்தை மாற்றுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழகத்தில் மே 16-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதிமுக வேட்பாளர் பட்டியல் கடந்த 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

அவ்வப்போது வேட்பாளர்கள் மாற்றப்பட்டாலும் சென்னை தொடங்கி, விருத்தாச்சலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம் என பல மாவட்டங்களில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், தொண்டர்கள் 5 பேர் உயிரிழந்ததால் தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், எனினும் பிரச்சார நேரத்தை மாற்றுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.