Home Featured கலையுலகம் நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது – விஷால் மகிழ்ச்சி!

நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது – விஷால் மகிழ்ச்சி!

655
0
SHARE
Ad

nadigarசென்னை – தென்னிந்திய நடிகர்சங்க கடன் முழுமையாக அடைத்துவிட்டோம் என்று விஷால் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தென்னிந்திய நடிகர்சங்க பழைய நிர்வாகிகள் நடிகர்சங்க நிலத்தை எஸ்பிஐ சினிமாஸிடம் ஒப்படைத்து, அதன் மூலம் நடிகர்சங்க கடனை அடைக்கவும், வருவாய் ஈட்டவும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.

சமீபத்தில் நடிகர்சங்க புதிய பொறுப்பாளர்களாக பொறுப்பேற்ற பாண்டவர் அணியான விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் எஸ்.பி.ஐ. சினிமாஸிடன் பேசி கடன் வாங்கி நடிகர்சங்க நிலத்தை மீட்டனர்.

கடன் தொகையை அளிப்பதற்காகவும், நடிகர்சங்க கட்டிடத்தை கட்டுவதற்காகவும் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நடத்தியது. அதில் கிடைத்த வருவாய் மூலம் கடன் தொகையை அடைத்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

விஷால் கூறியதாவது, “ ஐசரி இடமிருந்து கடனாக வாங்கிய 2 கோடிரூபாயை அடைத்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்கட்ட தொகையாக 9 லட்சரூபாய் கொடுக்க முன்வந்த இவருக்கு உண்மையாக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர்சங்கம் கடனிலிருந்து மீட்டப்பட்டுவிட்டது. நடிகர்சங்க வரலாற்றிலேயே முதல் முறையாக, சங்க நிலம் கைக்கு வந்துவிட்டது மட்டுமில்லாமல், 8 கோடிரூபாய் அறக்கட்டளை கணக்கில் இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் விஷால்.