காதீர் மே தினப் பேரணியில் கலந்து கொள்ளும் தகவலை மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் (எம்டியுசி) இடைக்காலத் தலைவர் அப்துல்லா சானி அப்துல் ஹமீத் இன்று அறிவித்தார்.
மலேசியாவில் பணியாற்றும் தொழிலாளர்கள், அவர்கள் வெளிநாட்டினராக இருந்தாலும், உள்நாட்டினராக இருந்தாலும், நியாயமான முறையில் அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே அப்போராட்டத்தின் கோரிக்கை என்று அப்துல் ஹமீத் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்பேரணியில் சுமார் 10,000 முதல் 20,000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.