Home Featured தமிழ் நாடு இனி அதிமுகவில் ‘மச்சான்ஸ்’ நமீதா! தமாகாவிலிருந்து விலகிய எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனும் இணைந்தார்!

இனி அதிமுகவில் ‘மச்சான்ஸ்’ நமீதா! தமாகாவிலிருந்து விலகிய எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனும் இணைந்தார்!

898
0
SHARE
Ad

திருச்சி – நேற்று திருச்சியில் ஜெயலலிதா நடத்திய தேர்தல் பரப்புரையின்போது அவரது முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார்.

Namitha-joins ADMK-Jayalalitha‘மச்சான்ஸ்’ என்ற ஒரு வாசகத்தாலும், தனது அழகான, ஆஜானுபாகுவான உருவத்தாலும், தமிழ் சினிமா இரசிகர்களைக் கவர்ந்த நமீதா அதிமுகவில் இணைந்தது, அரசியல் ரீதியாக பெரிய பலம் இல்லை என்றாலும், அதிமுக பிரச்சார மேடைகள், இனி உற்சாகத்தாலும், இரசிகர்கள் கூட்டத்தாலும் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அதிமுகவில் இணைந்தார்

#TamilSchoolmychoice

நீண்டகால காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்ட எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் நேற்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

Jayalalitha-Balasubramanian SR-joins ADMKஜி.கே.வாசனுடன் இணைந்து காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ்நாடு மாநிலக் காங்கிரஸ் என்ற கட்சியில் இணைந்திருந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், வாசன், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததால் அதிருப்தி கொண்டு தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.