Home Featured நாடு சரவாக் தேர்தல்: 45 தொகுதிகளில் பல்முனைப் போட்டி! 40 தொகுதிகளில் பிகேஆர்! 31 தொகுதிகளில் ஜசெக!

சரவாக் தேர்தல்: 45 தொகுதிகளில் பல்முனைப் போட்டி! 40 தொகுதிகளில் பிகேஆர்! 31 தொகுதிகளில் ஜசெக!

587
0
SHARE
Ad

Sarawak-state electionsகூச்சிங்: நேற்று நடைபெற்ற சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பல தொகுதிகளில் கடுமையான பல்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 82 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டியின்றி வென்றுள்ள நிலையில், எஞ்சியுள்ள 80 தொகுதிகளில் போட்டிகள் ஏற்பட்டுள்ளன. இதில் 45 தொகுதிகளில் பல்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

புக்கிட் சாரி, மற்றும் புக்கிட் கோத்தா என இரு தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று காலை 10.00 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தபோது, 228 வேட்பாளர்கள் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

45 தொகுதிகளில் பல்முனைப் போட்டிகள் உருவாகியுள்ள நிலையில், ஐந்து தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டிகள் ஏற்பட்டுள்ளன. 12 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டிகள் ஏற்பட்டுள்ளன. 28 தொகுதிகளில் மூன்று முனைப் போட்டிகள் நிலவுகின்றன.

35 தொகுதிகளில் மட்டும் தேசிய முன்னணிக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் நேரடிப் போட்டிகள் ஏற்பட்டுள்ளன.

எந்த கட்சி எத்தனை தொகுதிகளில்…

போட்டி நடைபெறும் 80 தொகுதிகளிலும் தேசிய முன்னணி போட்டியிடுகின்றது. பிகேஆர் கட்சி 40 தொகுதிகளில் களமிறங்குகின்றது. ஜசெக 31 தொகுதிகளில் களம் காண்கிறது. பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பார்ட்டி அமானா நெகாரா 13 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

பாஸ் கட்சியோ 11 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகின்றது. ஸ்டார் எனப்படும் ஸ்டேட் ரிபோர்ம் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. பிபிடிஎஸ் பாரு கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

இவர்களைத் தவிர 36 சுயேச்சை வேட்பாளர்களும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர்.

சரவாக் தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது.