Home Featured தமிழ் நாடு 140 கோடி ரூபாய் சொத்து உள்ளது; வேட்புமனுத்தாக்கலில் ஜெயலலிதா தகவல்!

140 கோடி ரூபாய் சொத்து உள்ளது; வேட்புமனுத்தாக்கலில் ஜெயலலிதா தகவல்!

787
0
SHARE
Ad

jayalalitha3சென்னை – முதல்வர் ஜெயலலிதாவுக்கு மொத்தம் ரூ.140 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதில், அவரது பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து,  வங்கிக்கடன் குறித்து, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த உறுதி பத்திரத்தில் அவர் கூறியுள்ள விவரம் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்கள் விவரம்:

#TamilSchoolmychoice

* ரொக்க கையிருப்பு ரூ.41 ஆயிரம்.

* 25 வங்கிகளில் சேமிப்பு மற்றும் வைப்பு தொகை 10 கோடியே 63 லட்சத்து, 83,945 ரூபாய், 51 காசு.

* பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள தொகை 27 கோடியே, 44 லட்சத்து ,55 ஆயிரத்து, 450 ரூபாய்.

* பயன்படுத்தப்பட்டு வரும் மோட்டார் வாகனங்கள் மதிப்பு ரூ.42 லட்சத்து,25 ஆயிரம்.

* தங்க மற்றும் வெள்ளி நகைகள்(பெங்களூர் சிறப்பு நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளது)மதிப்பு: ரூ.3 கோடியே, 12 லட்சத்து, 50 ஆயிரம்.

* அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.41 கோடியே, 63 லட்சத்து, 55 ஆயிரத்து, 395 ரூபாய், 51 காசுகள்.

* தெலுங்கான மாநிலம் ஐதராபாதில் உள்ள 14.50 ஏக்கர் திராட்சை தோட்டம் மதிப்பு ரூ.14 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 300.

* காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே உள்ள நிலம் 3.43 ஏக்கர் நிலம். ரூ.34 லட்சம்.

* போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ரூ.13 கோடியே 30 லட்சத்து, 11 ஆயிரத்து 40.

* போயஸ் கார்டன் வீடு (வேதா நிலையம்) ரூ.72 கோடியே 9 லட்சத்து,83 ஆயிரத்து 190.

* வங்கிக்கடன் ரூ.2 கோடியே,4 லட்சத்து, 2 ஆயிரத்து 987.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.140 கோடியாக உள்ளது.  இருந்தும் ரூ.2 கோடிக்கு வங்கியில் கடன் வைத்துள்ளதாக உறுதி பத்திரத்தில் கூறியுள்ளார்.