Home Featured நாடு வரைமுறைக்கு உட்பட்டே பீர் விற்பனை செய்கின்றோம் – ஜிஎஸ்சி நிர்வாகம் அறிக்கை!

வரைமுறைக்கு உட்பட்டே பீர் விற்பனை செய்கின்றோம் – ஜிஎஸ்சி நிர்வாகம் அறிக்கை!

672
0
SHARE
Ad

GSCகோலாலம்பூர் – வயது வந்தவர்களுக்கும், இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் மட்டுமே பீர் விற்பனை செய்வதாக ஜிஎஸ்சி சினிமா நிர்வாகம் அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் பீர் விற்பனை செய்வது, சினிமா ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி, குடிப்பழக்கம் அதிகரிக்கக் காரணமாகிவிடும் என பினாங்கு இந்து சங்கம் அண்மையில் எழுப்பிய புகார்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜிஎஸ்சி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“ஜிஎஸ்சி பிரீமியர் மற்றும் கோல்ட் கிளாஸ் லாஞ்செஸ்களில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே விற்பனை (பீர்) செய்வது என்ற வரைமுறை உள்ளது”

#TamilSchoolmychoice

“ஒரு பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில், உள்நாட்டு சட்டங்களைப் பின்பற்றி, இஸ்லாமியர்களுக்கும், 18 வயதிற்கு குறைவானவர்களுக்கும் பீர் விற்பனை செய்வதில்லை” என்று மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் ஜிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.