Home Featured தமிழ் நாடு மதுரையில் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு!

மதுரையில் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு!

590
0
SHARE
Ad

மதுரை – தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று மாலை மதுரை வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமான அளவில் மதுரை மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

மதுரை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Jayalalithaஜெயலலிதா-கோப்புப் படம்

#TamilSchoolmychoice

ஜெயலலிதா கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான மேடை மதுரை – சிவகங்கை சாலை சந்திப்பு சுற்றுச்சாலை அருகே அமைக்கப்பட்டிருந்தது.

2014 மக்களவைத் தேர்தலின்போதும் இதே இடத்தில்தான் முதல்வர் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் சார்பிலும், கள்ளழகர் ஆலயத்தின் சார்பிலும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

உள்நாட்டு நேரப்படி மாலை சுமார் 5.30 மணியளவில் ஜெயலலிதா தனது பிரச்சார உரையைத் தொடங்கியுள்ளார்.

(மேலும் செய்திகள் தொடரும்)