
சாண்டா கிளாரா கௌண்டி ஷெரிப் அலுவலகத்தின் அதிகாரி சார்ஜண்ட் ஆண்ட்ரியா அரேனா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், குப்பெர்டினோவில் உள்ள ஆப்பிளின் முதன்மை அலுவலகத்தில் இருந்து காலை 8.35 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் வந்தது. உடனடியாக காவல்துறை அங்கு சென்று பார்த்த போது ஆண் ஒருவர் இறந்த நிலையில் இருந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் மற்ற யாருக்கும் காயம் எதுவும் இல்லை. இது ஒரு தனிப்பட்ட சம்பவமாக நாங்கள் நம்புகின்றோம். கேம்பசில் வேறு யாரும் இல்லை. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்தப் பணியாளரின் மரணத்திற்கான காரணத்தை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது திறமையான இளம் சக ஊழியர் இறந்த சம்பவத்தை அறிந்து உடைந்து போனோம். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடன் பணியாற்ற மற்ற ஊழியர்களுக்கும் எங்களது வருதத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று தெரிவித்துள்ளது.