Home Featured நாடு தர்மேந்திரன் மரணத்திற்கு அதிகாரிகளே காரணம் – ஆணையம் உறுதிப்படுத்தியது!

தர்மேந்திரன் மரணத்திற்கு அதிகாரிகளே காரணம் – ஆணையம் உறுதிப்படுத்தியது!

845
0
SHARE
Ad

dharmaபுத்ராஜெயா – காவல்துறைத் தடுப்புக் காவலில் என்.தர்மேந்திரன் மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரைக் குறுக்கு விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளே காரணம் என்று அமலாக்கத்துறை நேர்மை ஆணையம் (Enforcement Agency Integrity Commission) அறிவித்துள்ளது.

இஏஐசி-ன் தலைவர் யாக்கோப் எம் சாம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை அதிகாரிகளால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாகத் தான் தர்மேந்திரன் மரணமடைந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், அவரது உடம்பில் 52 இடங்களில் மழுங்கிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“கடுமையான இரத்தப் பேரிழப்பு – acute massive loss of blood ” காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால் (hypovolemic shock) தர்மேந்திரன் மரணமடைந்துள்ளதையும், அவர் உயிருடன் இருக்கும் போதே அவரது காதுகளில் ஸ்டேபில் (staple) செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதையும் நோயியல் மருத்துவர் (pathologist) அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதை செய்தியாளர்கள் சந்திப்பில் யாக்கோப் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகள் சிலர் மூடி மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததையும் யாக்கோப் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட அதிகாரியின் நடவடிக்கை எடுக்க தலைமை வழக்கறிஞர் மன்றத்திற்கும் யாக்கோப் பரிந்துரை செய்துள்ளார்.

செராசிஸ் இரண்டு பேரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக, கடந்த 2013-ம் ஆண்டு, மே 11-ம் தேதி தர்மேந்திரன் கைது செய்யப்பட்டார்.

ஐபிகே கேஎல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், 2013, மே 21-ம் தேதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.