Home Featured தமிழ் நாடு 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் – கருணாநிதி விழுப்புரத்தில் பிரச்சாரம்!

103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் – கருணாநிதி விழுப்புரத்தில் பிரச்சாரம்!

573
0
SHARE
Ad

karunanithiவிழுப்புரம் – 93 வயதல்ல, 103 வயதானாலும் மக்களுக்காக பணியாற்ற உள்ளதாக விழுப்புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். விழுப்புரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: யாராலும் திமுகவை வீழ்த்த முடியாது.

நான் உங்களுக்காகவே பணியாற்றுவேன், பாடுபடுவேன். சமீபத்தில் சென்னையில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஜெயலலிதா சந்திக்கவில்லை. அப்போது கூட வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

#TamilSchoolmychoice

திமுக ஆட்சியில் மதுவிலக்கு சட்டமாக்கப்படும். மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்கு தான். மேலும், நான் இளைஞர்களை நம்பியிருக்கிறேன். இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பு. இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தவே நான் சுற்றி வருகிறேன்.

நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனக்கு 93 வயது ஆகிறது. என்னை ஓய்வெடுக்குமாறு சிலர் கூறுகின்றனர். 93 அல்ல 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் என கருணாநிதி பேசினார்.