Home Featured கலையுலகம் ஜி.வி.பிரகாஷின் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

ஜி.வி.பிரகாஷின் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

722
0
SHARE
Ad

Enakku Innoru Per Irukku,சென்னை – ஜி.வி.பிரகாஷின் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, கருணாஸ், நிரோஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

‘டார்லிங்’ வெற்றிக்குப்பின் இயக்குநர் சாம் ஆண்டன்-ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் இப்படத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’ வெற்றிக்குப்பின் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி 2-ஆவது முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இதுதவிர ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’, ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படங்களில் நடித்த மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று வெளியான இப்படத்தின் முன்னோட்டம் தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாகவும், ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஜி.வி.பிரகாஷுக்கு மற்றொரு வெற்றிப்படமாக மாறும் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் முன்னோட்டம்: