Home Featured கலையுலகம் தமிழகத் தேர்தலில் ஓட்டுப் போட மாட்டேன்- கமல் ஆவேசம்!

தமிழகத் தேர்தலில் ஓட்டுப் போட மாட்டேன்- கமல் ஆவேசம்!

865
0
SHARE
Ad

kamalvccvc4சென்னை – “தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா,  சென்னையில் இன்று நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், எனது ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு, மே 16-ஆம் தேதி தொடங்குகிறது.  அதனால் படப்பிடிப்பிற்கு போய்விடுவேன். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன்.

ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிக்கு போனபோது என் வாக்கினை வேறு யாரோ போட்டுவிட்டு சென்றனர். இந்த முறை வாக்களிப்பதற்காக கேட்டேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இத்தனைக்கும் தேர்தலாணைய அதிகாரி என் நெருங்கிய நண்பர். இருந்தும் என்ன செய்வது?” என்று கண்சிவந்தார் கமல்.

#TamilSchoolmychoice

வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டதற்கு, முதலில் என் ரசிகன் எனது அலுவலகத்திற்கு வரும்போது, செருப்பை கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரச்சொல்லுவேன். அதுபோல, திரும்ப செல்லும் போது, அந்த செருப்பை மாட்டிக்கொண்டு செல் என்று சொல்லுவேன்.

அதற்காக நான் செருப்பு என்று சொன்னதை தவறான உவமையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னிடம் அரசியல் கொண்டு வர வேண்டாம். என்னுடைய நற்பனி இயக்கங்களுடன் சேர்ந்து தொண்டு செய்வதே போதும் என பதில் கூறினார் கமல்.