Home Featured தமிழ் நாடு திமுக-அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் குஷ்டநோய் வரும் – சீமான் சாபம்!

திமுக-அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் குஷ்டநோய் வரும் – சீமான் சாபம்!

723
0
SHARE
Ad

simaanமதுரை – திமுகவின் உதய சூரியன் மற்றும் அதிமுகவின் இரட்டை இலையில் வாக்களித்தால் அவர்கள் கையில் குஷ்டநோய் வந்துவிடும் என்று மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் பெண் வேட்பாளர் சாராளை ஆதரித்து பேசிய சீமான், விவசாயம் செய்வதை கேவலம் என்று நினைக்கின்றனர் நமது மக்கள்.

ஆனால், அதுதான் நம்மை காப்பாற்றுகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஜெயலலிதா கூட்டத்துக்கு போனவரிடம் கேட்டேன். எப்படி இருந்தது என்று. ஒரு முறை போனால் 200 ரூபாய். ஒரேடியா போனால் 20 லட்ச ரூபாய் என்றார்.

#TamilSchoolmychoice

நாட்டின் மதுவிற்கு அஸ்திவாரம் போட்டது கருணாநிதி தான். அந்த கள்ளச்சாவி திறந்ததுதான் டாஸ்மாக். அதனால், அனைவரும் இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களிக்க வேண்டும்.

கலைஞர் கருணாநிதியே இந்த முறை இரட்டை மெழுகுவர்த்திக்கு தான், கை நடுக்கத்தில் வாக்களிக்கப் போகிறார். இம்முறை, உதய சூரியன் மற்றும் இரட்டை இலையில் வாக்களித்தால் அவர்கள் கையில் குஷ்டம் வந்துவிடும் என்று கடைசியில் சாபம் விட்டார் சீமான்.