கூச்சிங் – சரவாக்கில் நுழைய பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வாருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை மிரி சென்ற அவரை, விமான நிலையத்திலுள்ள குடிநுழைவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள நூருல் இசா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, நூருல் இசாவில் தயார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த தடை சில கட்டுப்பாடுகளுடன் விலக்கப்பட்டுள்ளது.
நேற்று சரவாக் சென்ற அவருக்கு வரும் மே 5-ம் தேதி வரையில் சரவாக்கில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.