Home Featured நாடு “கடவுள் சொன்னதால் வந்தேன்” – வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் கூறுகிறார்!

“கடவுள் சொன்னதால் வந்தேன்” – வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் கூறுகிறார்!

524
0
SHARE
Ad

handcuffகோலாலம்பூர் – “கடவுள் என்னிடம் கூறியதால் தான் உங்கள் வீட்டுக்குள் நுழைந்தேன்” என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை, செகாம்புட்டில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மதில் சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளார் ஒருவர்.

அவர் உள்ளே அத்துமீறி நுழைவதைக் கண்ட நீதிபதியின் மனைவி, தனது கணவரிடம் உடனடியாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதனையடுத்து, அந்நபரை வீட்டிலிருந்து வெளியே போகும் படி அவர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களது எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்நபர் மீண்டும் மதில் சுவரின் மீது ஏறி வெளியே சென்றுள்ளார்.

பின்னர், அரைமணி நேரத்திற்குப் பின்பு, ஹோண்ட எச்ஆர்-வி இரக வாகனத்தில் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்த அந்நபர், வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி, நீதிபதியை வரவழைத்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கடவுள் தன்னிடம் கூறியதால் தான் வீட்டிற்குள் நுழைந்தேன் என்றும் அந்நபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செந்துல் காவல்துறைத் தலைமை துணை ஆணையர் ஆர்.முனுசாமி கூறுகையில், “செகாம்புட்டில் உள்ள வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. அது அங்கிருந்த இரகசியக் கேமெராவிலும் பதிவாகியுள்ளது. சந்தேகப்படும் அந்நபர் நீல நிற சட்டையும், கருப்பு நிற கால்சட்டையும் அணிந்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

அந்நபர் பயன்படுத்திய அந்தக் கார் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வருவது என்ற தகவலும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது இச்சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.