திருப்பதி – திருப்பதிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மலையை சுற்றி இரும்பு வேலி அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இப்பணிக்கு முதல் கட்டமாக சுமார் ரூ.2 கோடியை ஒதுக்கியுள்ளது.
திருப்பதி தேவஸ்தான நீர்த்தேக்கம் வரை சுமார் 4.8 கிலோ மீட்டர் தூரத்துக்கான முதல்கட்ட பணியை முடித்துள்ளது. அடுத்து 2–ஆவது கட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவஸ்தானம் மேலும் ரூ. 1.5 கோடி ஒதுக்கி உள்ளது.
இரும்புவேலி அமைப்பதன் மூலம் வனப்பகுதி வழியாக தீவிரவாதிகள் திருமலையில் ஊடுருவ முடியாது என கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.