Home One Line P2 கொவிட்-19: திருப்பதி கோயில் மூடப்படுமா? சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் யத்திரையை தவிர்க்கவும்!

கொவிட்-19: திருப்பதி கோயில் மூடப்படுமா? சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் யத்திரையை தவிர்க்கவும்!

1020
0
SHARE
Ad

ஹைதரபாத்: திருமலையில் கொரொனாவைரஸைத் தவிர்ப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்துகையில், பக்தர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் ,அவர்கள் தங்கள் யாத்திரையை மறுபரிசீலனை செய்யுமாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“பக்தர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படுகிறார்களானால் அவர்களின் புனித யாத்திரையைத் தவிர்க்க அல்லது ஒத்திவைக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். இது தவிர, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை நெரிசலான இடங்களில் மேற்கொள்ளும். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

யாராவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டால், வெப்ப பரிசோதனை உடனடியாக செய்யப்படும் என்றும் எந்தவொரு நேர்மறையான அறிகுறியும் உள்ள நபர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

உடல் தூய்மையையும், மூக்கு மூடிகளையும் எடுத்துச் செல்லும்படி பக்தர்களிடம் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, தேவஸ்தானம் இந்த தொற்று காரணமாக மூடப்படுமா என்று கேட்டதற்கு, நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், கூடுதல் விவரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.