Home One Line P2 உலக எண்ணெய் விலை 30 விழுக்காட்டிற்கும் அதிகமாக குறைந்துள்ளது!

உலக எண்ணெய் விலை 30 விழுக்காட்டிற்கும் அதிகமாக குறைந்துள்ளது!

657
0
SHARE
Ad

மாஸ்கோ: அதிகமான உற்பத்தி நிறுத்தங்களுக்கு ஒபெக் எண்ணெய் உற்பத்தியாளர்கள் உடன்படத் தவறியதை அடுத்து, திங்களன்று எண்ணெய் விலை 30 விழுக்காட்டிற்கும் மேலாக சரிந்தது என்று ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய்க்கான மே மாத விலை 28.69 விழுக்காடு குறைந்து – ஒரு பீப்பாய்க்கு 32.28 அமெரிக்க டாலராக இருந்தது. டபிள்யூடிஐ கச்சா எண்ணெய்க்கான ஏப்ரல் மாத மதிப்பு 31.35 விழுக்காடு குறைந்து ஒரு பீப்பாய்க்கு 28.33 அமெரிக்க டாலராக இருந்தது.

சவூதி தலைமையிலான ஒபெக், அல்லது பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு, ரஷ்யா தலைமையிலான உறுப்பினர் அல்லாத நட்பு நாடுகளுடன் 2016 முதல் உற்பத்தி குறைப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஒபெக்+ என அழைக்கப்படும் பரந்த கூட்டணி, வியன்னாவில் வெள்ளிக்கிழமை கூடி உற்பத்தி குறைப்புகள் குறித்து விவாதித்தது.

கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உற்பத்தி குறைப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடாமல், எண்ணெய் சந்தையை நிலை நிறுத்த மட்டும் ஒபெக் + ஒப்புக்கொண்டது.