Home Featured நாடு கூ சின் வா : மாத வருமானம் ரிங்கிட் 12,107-81! சொத்துக்களோ 10 வீடுகள்- நிலங்கள்!

கூ சின் வா : மாத வருமானம் ரிங்கிட் 12,107-81! சொத்துக்களோ 10 வீடுகள்- நிலங்கள்!

754
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையின் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு இலாகாவின் முன்னாள் தலைவரான டத்தோ கூ சின் வா-வுக்கு எதிரான பண இருட்டடிப்பு (money laundering ) ஊழல் வழக்கு, நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

datuk-ku-chin-wahவிசாரணையின்போது, கூ சின் வாவுக்கு மாத வருமானம் ரிங்கிட் 12,107-81 என்றும், ஆனால் அவர் 10 வீடுகள்-நிலங்களுக்கு உரிமையாளராக இருக்கிறார் என்ற விவரமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதே வேளையில் கூ சின் வா-வின் (படம்) மனைவியின் மாத வருமானம் 8,000 ரிங்கிட் என்ற தகவலையும், ஒரு சாட்சியாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கிய அரசு தரப்பு வழக்கறிஞர் முகமட் அஸ்னாவி அபு ஹானிபா கூறினார்.

#TamilSchoolmychoice

கோத்தா கினபாலுவில் இணை வீடு ஒன்று, வங்சா மாஜூவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று, பூச்சோங்கில் ஒரு வீடு, செரண்டா கம்போங் செந்தோசாவில் மலிவு விலை கடை ஒன்று, பண்டார் பெர்மாய் மலாக்காவில் கடைவீடு, கோலாலம்பூர் ஜாலான் மெகாவில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு, சுவிஸ் கார்டன் ரெசிடென்ஸ் அடுக்குமாடி வீடு ஒன்று, சபா குண்டசாங்கில் பங்களா நிலம், பங்சார் சவுத் பகுதியில் ஓர் அடுக்குமாடி வீடு – என பல சொத்துக்கள் கூ சின் வாவுக்கு இருப்பதாகவும் முகமட் அஸ்னாவி தெரிவித்துள்ளார்.

இந்த சொத்துக்களை வாங்குவதற்கான பணம் எப்படி கிடைத்தது என்ற விவரங்களை கூ சின் வா வெளியிடாத காரணத்தால் அவர் மீது பண இருட்டடிப்பு வழக்கு தொடரப்பட்டதாக வழக்கை நடத்தும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் டிபிபி புடிமான் லுஃப்டி முகமட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

646,000 ரிங்கிட் மதிப்பு நிறுவனப் பங்குகளையும் தானும், தனது மனைவியும் வைத்திருப்பதாகவும் கூ சின் வா தனது சொத்துக்கள் பட்டியலுக்கான பிரமாணத்தில் தெரிவித்துள்ளார்.

கூ சின் வா தம்பதியர் ஐந்து கார்களையும் வைத்திருக்கின்றனர். தங்களுக்கும் தங்களின் இரு பிள்ளைகளுக்கும் சேர்த்து அவர்கள் 18 காப்புறுதி ஒப்பந்தப் பத்திரங்களுக்கு பணம் செலுத்தி வருகின்றனர்.

961,500 ரிங்கிட் பணத்தை தரகுக் கட்டணமாக (கமிஷனாகப்) பெற்றதை தனது சத்தியப் பிரமாணத்தில் தெரிவிக்கத் தவறியதற்காக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் கூ சின் வா மீது, குற்றம் நிருபீக்கப்பட்டால், 1 மில்லியன் ரிங்கிட்  வரையிலான அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.