Home Featured தமிழ் நாடு தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.2000 கோடி எங்கே? அமித் ஷா கேள்வி!

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.2000 கோடி எங்கே? அமித் ஷா கேள்வி!

560
0
SHARE
Ad

amit-shahசென்னை – தமிழகத்தில், வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.2000 கோடியை, வளர்ச்சி திட்டங்களுக்கு அதிமுக அரசு வழங்கவில்லை. ஆனால், அதை அம்மா பெயரில் நிவாரணமாக வழங்கப்பட்டது என அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் என்றும், 50 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றஞ்சாட்டியிருக்கிறார். பால் கொள்ளை, மணல் கொள்ளை என பல்வேறு கொள்ளைகள் நடை பெற்று இருப்பதாகவும் அவர் கூறினார்.

சென்னையில் வந்தபோது அதிமுக அரசு தூங்கிக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பட்டுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

#TamilSchoolmychoice

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி வேண்டுமா? மாற்றம் வேண்டுமா? வளர்ச்சி வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தலே இது. ஊழலா? வளர்ச்சியா? என்பதை வாக்காளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

திமுக மீது 2 ஜி ஊழல், ஏர்செல் மேக்சிஸ் ஊழல்கள் உள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விட்டு வந்துள்ளார்.

பால் கொள்முதலில் ஊழல், மணல் கொள்ளையில் ரூ.20 ஆயிரம் கோடி வரை ஊழல், எனவே, ஊழலில் ஊற்றுக்கண்களாக விளங்கும் இந்த இரு கட்சிகளையும் புறக்கணியுங்கள்.

தமிழகத்தில், வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.2000 கோடியை வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்கவில்லை. ஆனால், அதை அம்மா பெயரில் நிவாரணமாக வழங்கப்பட்டது என குற்றம் சாட்டினார்.