Home Featured உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து டிரம்ப் போட்டியிடுவது உறுதி!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து டிரம்ப் போட்டியிடுவது உறுதி!

691
0
SHARE
Ad

news_07-04-2016_46helaryஇண்டியானா – அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியில், அதிபர் வேட்பாளராக முன்னாள் வெளியூறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகிக்கிறார்.

இந்நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கோடீஸ்வரர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அக்கட்சியில் அவருக்கு ஒரே போட்டியாக இருந்த டெக்சாஸ் மாநில செனட்டர் டெட் குருசும் இப்போது போட்டிக்கு வரப் போவதில்லை.

#TamilSchoolmychoice

காரணம், நேற்று முன்தினம் நடைபெற்ற இண்டியானா மாநிலத்தின் குடியரசுக் கட்சி மாநிலத்துக்கான அதிபர் வேட்பாளருக்கானத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டெட் குருஸ் (படம்) அமெரிக்க அதிபருக்கான போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இண்டியானா மாநிலத்தின் குடியரசுக் கட்சிப் பேராளர்கள் மற்றொரு போட்டியாளரான டொனால்ட் டிரம்பைத் தேர்ந்தெடுத்ததைத் தொடர்ந்து, அவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இதனை, அக்கட்சியின் தேசியக்குழு தலைவர் ரைன் ஃபிரிப்பசும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியை பொறுத்தவரை ஹிலாரி கிளிண்டன் பலமான முன்னிலை வகிப்பதால், அதிபர் தேர்தலில் அவருக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையில் தான் போட்டி நிலவப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது.