சென்னை – அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். இதன் முதல் பிரதியை, தம்பிதுரை பெற்றார். இதில் பல இலவச அறிவிப்புகளையும், அதிரடி கவர்ச்சியான திட்டங்களையும் அறிவித்துள்ளனர் ஜெயலலிதா.
தேர்தல் அறிக்கையின் முக்கிய தகவல்கள்:-
* மகளிருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஆட்டோக்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
* முல்லைப்பெரியார் அனையின் நீர்மட்டம் 152அடியாக உயர்த்தப்படும்.
* தாதுமணல் விற்பனையை அரசே ஏற்கும்.
* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் இனி காலை சிற்றுண்டியும் வழங்கப்படும்.
* தாலிக்கு தங்கம் இனி 4 கிராமிலிருந்து ஒரு சவரனாக வழங்கப்படும்.
* குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் இலவச செல்பேசி.
* புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்.
* கேபிள்டிவி இலவசம்.
* மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
* மகப்பேறு உதவித்தொகை ரூ. 18,000 ஆக உயர்த்தப்படும்.
* குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
* பொங்கல் திருநாளுக்கு கோ-ஆப்டெக்ஸில் துணி வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்படும்.
* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணமில்லை.
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2016-2021 காலக்கட்டங்களில் 40000கோடி வரை பயிர்கடன்கள் வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில் சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம்.
* விவசாயிகளின் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்.
* சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு எளிமையாக்கப்படும்.
* மீனவர் நிவாரண தொகை ரூ.5000-ஆக உயர்த்தப்படும்.
* மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம்.
* காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* உள்நாட்டின் மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்.
* புதிய சாலைகள் அமைக்கப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
* பள்ளிக்கல்வி மேம்படுத்தப்படும்.
* ஏழை, எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்காக அம்மா பேங்கிங் கார்டு.
* சிறுவர், சிறுமியருக்கு வைட்டமின் சி மாத்திரை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.