Home கலை உலகம் வடிவேலுவின் அடுத்த படத்தில் இருந்து சிம்புதேவன் விலகல்?

வடிவேலுவின் அடுத்த படத்தில் இருந்து சிம்புதேவன் விலகல்?

623
0
SHARE
Ad

Vadivelu-sliderசென்னை, மார்ச் 16 – தனது வாயினாலேயே பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, அதே வாயினாலேயே சில ஆண்டுகள் சினிமாவை விட்டே ஒதுங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம்  கொடுக்க இருந்த வடிவேலுவுக்கு  தற்போது மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

வடிவேலுவை உச்சிக்கு உயர்த்திய படம் தான் ‘இம்சை அரசன் 23அம் புலிகேசி’. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைய இருப்பதாக வடிவேலு பேட்டிகளின் போது கூறி வந்தார்.

#TamilSchoolmychoice

 

இப்படத்தை இம்சை அரசன் படத்தை இயக்கிய சிம்புதேவனே இயக்கப் போவதாக இருந்தது. இதற்கிடையில், இப்படத்தின் கதையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற கதாபாத்திரத்தை நுழைக்க வேண்டும் என்று வடிவேலு கேட்டுக்கொண்டாராம். மேலும் சிம்பு தேவன் எழுதிய வசனங்களிலும் திருத்தங்கள் செய்யத் தொடங்கினாராம்.

இதனால் வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,  ஒரு கட்டத்தில் இந்த படமே வேண்டாம் என்று கூறி சிம்புதேவன் வெளியேறி விட்டாராம்.

இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை தற்போது மீண்டும் வீட்டில் அமர்ந்து யோசிக்கத் தொடங்கி விட்டாராம் வடிவேலு.