Home Featured தமிழ் நாடு இனி எந்த பதவிக்கும் போட்டியிட மாட்டேன் – வைகோ அதிரடி!

இனி எந்த பதவிக்கும் போட்டியிட மாட்டேன் – வைகோ அதிரடி!

664
0
SHARE
Ad

vaikoசென்னை – இனி என் வாழ்நாளில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் சி. அம்பிகாபதியை ஆதரித்து, வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

மதுவிலக்கு விவகாரத்தில் பொய் பேசுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டாளிகள் என்று சாடினார். திமுக ஆட்சியில் அதிமுகவினரின் ஆலைகளிலும், அதிமுக ஆட்சியில் திமுகவினரின் ஆலைகளிலும் மது வாங்கப்படுவதாக வைகோ கூறினார்.

கனிம மணல், ஆற்றுமணல் கொள்ளையை தடுத்தாலே, அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று பேசிய வைகோ, வாக்களார்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை ‌எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டினார்.

#TamilSchoolmychoice

பிரச்சார பேச்சை வைகோ நிறைவு செய்தபோது மதிமுக தொண்டர் ஒருவர், “நீங்கள் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே என்று கேட்டார்.

அதற்கு  பதில் அளித்த வைகோ, அண்ணாவின் கொள்கைகளுக்காக, சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வதற்காக, மதுக் கடைகளை-ஊழலை ஒழிக்க, தமிழக மக்களைக் காக்க வாழ்கிறேன். எனக்கென சுயநலம் இல்லை. நாடு கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக பேசுகிறேன்.

இனி என் வாழ்க்கையில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று கூறினார். சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறிய வைகோ கடைசி நேரத்தில் போட்டியிடப் போவதில்லை என்று கூறி பின்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.