Home Featured நாடு ஹூசாம் மூசா பாஸ் கட்சியிலிருந்து நீக்கம்!

ஹூசாம் மூசா பாஸ் கட்சியிலிருந்து நீக்கம்!

789
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பாஸ் கட்சியிலிருந்து அதன் பிரபல தலைவர்களில் ஒருவரான ஹூசாம் மூசா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தான் இன்னும் அதிகாரபூர்வ கடிதம் எதையும் பெறவில்லை என ஹூசாம் மூசா அறிவித்துள்ளார்.

husam-musa5-nov3_400_267_100கிளந்தான் மாநிலத்தின் சாலோர் சட்டமன்ற உறுப்பினருமான ஹூசாம் மூசா பாஸ் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமாவார்.

தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ள ஹூசாம் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கும் கடிதம் பெற்றவுடன் தனது பதில் கருத்தைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தொடர்ந்து பாஸ் கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரப் போவதாகவும் ஹூசாம் கூறியுள்ளார்.

இதுவரையில் சமூக வலைத் தளங்களின் மூலமாகத்தான் பாஸ் கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்ட தகவலைத் தான் தெரிந்து கொண்டுள்ளதாகவும் ஹூசாம் கூறியுள்ளார்.

1982ஆம் ஆண்டு முதல் பாஸ் கட்சியில் ஹூசாம் உறுப்பினராக இருந்து வருகின்றார்.