Home Featured நாடு பாத்தாங் காலி அருகே இரயில்கள் மோதல் – 3 பயணிகள் காயம்!

பாத்தாங் காலி அருகே இரயில்கள் மோதல் – 3 பயணிகள் காயம்!

636
0
SHARE
Ad

KTMBகோலகுபு பாரு – இன்று சனிக்கிழமை மதியம் பாத்தாங் காலி அருகே, கோலாலம்பூரில் இருந்து ஈப்போ சென்ற மின்சார இரயிலும், பட்டர்வத்தில் இருந்து ஜோகூர் பாரு நோக்கி வந்த அதிவேக இரயிலும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் மூன்று பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதோடு, பலருக்கும் லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது.

KTMB4இதனால் பயணிகள் அனைவரும் இரயிலில் இருந்து இறக்கப்பட்டு, பேருந்துகளின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக, கேடிஎம்பி (Keretapi Tanah Melayu Berhad ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

KTMB2கேடிஎம்பி அளித்துள்ள தகவலின் படி, இன்று மதியம் கிலோமீட்டர் 322-ல் மதியம் 1.45 மணியளவில் நடந்துள்ளது.

#TamilSchoolmychoice

KTMB6இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் அது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றும் கேடிஎம்பி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.