Home Featured தமிழ் நாடு இன்று தஞ்சாவூரில் ஜெயலலிதா பிரச்சாரம்! கன்னியாகுமரியில் மோடி! சென்னையில் கலைஞர்!

இன்று தஞ்சாவூரில் ஜெயலலிதா பிரச்சாரம்! கன்னியாகுமரியில் மோடி! சென்னையில் கலைஞர்!

1256
0
SHARE
Ad

jayalalitha-karunanidhi-தஞ்சாவூர் – மாநிலம் முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் அதே வேளையில் அதிமுக சார்பாக போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வரிசையில் இன்று ஜெயலலிதா மாலை 5.00 மணியளவில் தஞ்சாவூரில் உரையாற்றுகின்றார்.

பிரம்மாண்டமான அளவில் நடைபெறும் இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் திருச்சி வந்தடையும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை சென்றடைகின்றார்.

கூட்டம் முடிந்ததும், தஞ்சையிலிருந்து மீண்டும் திருச்சிக்கு, சாலை வழியாக வந்தடையும் ஜெயலலிதா, விமானம் மூலம் திருச்சியிலிருந்து சென்னை திரும்புகின்றார்.

#TamilSchoolmychoice

தஞ்சை மாவட்டம், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியை உள்ளடக்கிய பகுதி என்பதால், ஜெயலலிதா இன்று என்ன பேசுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் பிரச்சாரம்

கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி. இன்று மாலை கன்னியாகுமரியில் பிரச்சார உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் சென்னையில் பிரச்சாரம்

இதற்கிடையில், திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சென்னையில் தனது பிரச்சாரத்தைத் தொடரவுள்ளார்.