கோலாசிலாங்கூர் – சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும், துணையமைச்சருமான டத்தோ நோரியா காஸ்மோன் (படம்) நல்லடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு அருகிலேயே, அவருடன் இந்த விபத்தில் மரணமடைந்த அவரது கணவர் அஸ்முனி அப்துல்லாவும் இன்று காலை 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
கோலசிலாங்கூரிலுள்ள 12வது மைல் வட்டாரத்தில் உள்ள சுங்கை பூரோங் முஸ்லீம் இடுகாட்டு மையத்துக் கொல்லையில் இந்த நல்லடக்கச் சடங்கு நடைபெற்றது.
மரணத்திலும் இணைந்த நோரியா-அஸ்முனி தம்பதிகள்…(படம்: நன்றி எம்ஸ்டார் இணையத் தளம்)
#TamilSchoolmychoice
இதனைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் ஒரே ஒரு பயணியின் நிலைமை மட்டுமே இன்னும் தெரியவில்லை.