Home Featured நாடு இடைத்தேர்தல்களுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்!

இடைத்தேர்தல்களுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்!

664
0
SHARE
Ad

Abdul Ghani Sallehபுத்ராஜெயா – கோல கங்சார் மற்றும் சுங்கை பெசார் தொகுதிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசி இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கவுள்ளது தேர்தல் ஆணையம்.

நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில், காலியிடங்கள் குறித்து நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வ தகவல் அளித்ததாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ அப்துல் கானி சாலே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை சரவாக்கில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோரியா காஸ்னோன், கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைரில் அனுவார் வான் அஹ்மாட் ஆகியோரோடு, அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த மேலும் 4 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (The Star)