Home Featured கலையுலகம் நடிகர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கியது லைகா நிறுவனம்!

நடிகர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கியது லைகா நிறுவனம்!

699
0
SHARE
Ad

Nadigar-Sangamசென்னை – நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக லைகா நிறுவனம் அறிவித்த ரூ 1 கோடிக்கான காசோலையை இன்று நேரில் விஷாலிடம் வழங்கப்பட்டது.

கமல்ஹாசன் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பூஜை சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது.

இப்படத்தை லைக்கா நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் பூஜையின் போது, நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி தருவதாக அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து லைக்கா நிறுவன சென்னை நிர்வாகி ராஜு மகாலிங்கம் இன்று அந்த ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளார் கார்த்தி ஆகியோரை சந்தித்து வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் நிர்வாகிகளான ஐசரி கணேஷ், நடிகர் ராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.