Home Featured நாடு சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: பொது விசாரணை அமைக்க கிட் சியாங் வலியுறுத்து!

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: பொது விசாரணை அமைக்க கிட் சியாங் வலியுறுத்து!

614
0
SHARE
Ad

Lim-Kit-Siang1-300x225கோலாலம்பூர் – கடந்த மே 5-ம் தேதி, பாத்தாங் லூப்பாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் தொடர்பாக பொது விசாரணை அமைக்க வேண்டும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த நாட்டில் ஹெலிகாப்டர்களின் பாதுகாப்பு குறித்து முழு விசாரணை நடத்த அண்மைய ஹெலிகாப்டர் விபத்து காரணமாகியுள்ளது. மேலும் மலேசியாவில் இதுவரை நடந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.” என்று லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice