Home Featured தமிழ் நாடு இனி என் மகனோ-மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

இனி என் மகனோ-மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

795
0
SHARE
Ad

mk-stalinசென்னை – என் குடும்பத்திலிருந்து என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்ர். தொலைக்காட்சிக்கு ஒன்றில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது, அவரிடம் ‘ஜெயலலிதா ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுக குடும்ப கட்சி என்றும், குடும்ப ஆட்சி என்றும் கூறுகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்வியை முன் வைத்தனர்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “சசிகலாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு, அதனை மூடி மறைப்பதற்காக, அவர்கள் குடும்ப ஆட்சி நடத்திக்கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், திட்டமிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக செய்யக் கூடிய ஒரு யுக்தி இது. வேறு ஒன்றும் அல்ல.

#TamilSchoolmychoice

நான் 45 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். அதுவும் திமுகவில் கிளைக் கழகத்தில் இருந்து தொடங்கி, நகரக் கழகம், பகுதிக் கழகம், மாவட்டக் கழகம், தலைமைக் கழகம் என படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன். ஆகவே என்னை வைத்து அவர்கள் சொல்வதை நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்றார்.

உங்கள் குடும்பத்தில் இருந்து இனி யாராவது அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? என்று கேட்டதற்கு, “நிச்சயமாக எனது மகனாக இருந்தாலும் சரி, எனது மருமகனாக இருந்தாலும் சரி, எங்கள் வீட்டில் இருக்கக் கூடிய யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.