Home Featured நாடு சபா கடலில் மாயமான வெளிநாட்டவர்களைத் தேடும் பணி தீவிரம்!

சபா கடலில் மாயமான வெளிநாட்டவர்களைத் தேடும் பணி தீவிரம்!

411
0
SHARE
Ad

sabah_semporna_informants_2310_620_369_100கோத்தா கினபாலு – கடந்த வாரம் சபாவின் வடக்குப் பகுதியான கூடட்டில், படகில் சென்ற 4 பேர் மாயமான சம்பவத்தில், அவர்களைத் தேடும் பணி தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் சிலர், கடலில் படகு ஒன்றின் எஞ்சினைக் கண்டறிந்த பகுதியில், இன்று மலேசிய கடற்படை அதிகாரிகளும், கடலோரக் காவல்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மலேசியக் கடல்சார் அமலாக்க முகமையின் சபா, லாபுவான் வட்டார இயக்குநர் மொகமட் சூபில் மட் சாம் தெரிவித்துள்ளார்.

“நேற்று எஞ்சின் கிடைத்த பகுதியில் இன்று காலை 7 மணி முதல் முக்குளிப்பாளர்கள் (divers) தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். என்றாலும், அலை காரணமாக மார்க்கர் மிதவை (marker buoy) குறிப்பிட்ட இடத்திலிருந்து நகர்ந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும் விடாமுயற்சியாக மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம், சபாவின் வடக்குப் பகுதியான புலாவ் பாலாம்பங்கானில் இருந்து கூடட் மாவட்டம் தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவுக்கு  இரு ஸ்பெயின் நாட்டவர்கள், சீனாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஒரு மலேசியர் ஆகிய நால்வரும் படகில் சென்றனர்.

அதன்பின்னர் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இதுவரைக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: நன்றி (Julia Chan)