Home Featured நாடு சுங்கை பெசார், கோல கங்சார் இடைத்தேர்தலில் பாஸ் போட்டியிடக்கூடும்!

சுங்கை பெசார், கோல கங்சார் இடைத்தேர்தலில் பாஸ் போட்டியிடக்கூடும்!

658
0
SHARE
Ad

Mustafa Aliகோலாலம்பூர் – கடந்த வாரம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோரியா காஸ்னோனும், கோல கங்சார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைர் இல் அனுவார் வான் அகமட்டும் பலியானதன் காரணமாக அவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அவ்விரு தொகுதிகளிலும் பாஸ் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து அக்கட்சியின் தேர்தல் இயக்குநர் முஸ்தபா அலி, மலாய் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில், பாரம்பரியமாக அத்தொகுதிகளில் பாஸ் போட்டியிட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 13-வது பொதுத்தேர்தலில், சுங்கை பெசார் தொகுதியில் 399 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் தோல்வியுற்றது.

அதேவேளையில் கோல கங்சாரில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் அவ்விரு தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் போட்டியிடுவது குறித்து கலந்தாலோசித்துவிட்டு முடிவு செய்வோம் என்று இன்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கூறியிருப்பதால், பாஸ் தனித்துப் போட்டியிடாது என நம்பப்படுகின்றது.