Home Featured உலகம் பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் : ரோட்ரிகோ 5 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி!

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் : ரோட்ரிகோ 5 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி!

638
0
SHARE
Ad

மணிலா – நேற்று நடைபெற்ற பிலிப்பைன்ஸ் அதிபருக்கான தேர்தலில் புதிய அதிபராக ரோட்ரிகோ டுடெர்ட்டே (படம்) அபார வெற்றி பெற்றுள்ளார்.

Rodrigo Duterte-President Philippinesஇதுவரை எண்ணப்பட்ட 89 சதவீத வாக்குகளில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள போட்டியாளரை விட, 5.92 மில்லியன் வாக்குகள் கூடுதலாகப் பெற்று, மாபெரும் வெற்றியை ரோட்ரிகோ பதிவு செய்துள்ளார்.

நடப்பு அதிபர் சார்பில் மார் ரோக்சாஸ் என்பவர் ரோட்ரிகோவை எதிர்த்து அதிபர் பதவிக்குப் போட்டியிட்டார்.

#TamilSchoolmychoice

கெட்ட வார்த்தைகளை பிரச்சார உரைகளில் பயன்படுத்துவது, நாட்டின் முக்கிய பிரச்சனைகளான குற்றச் செயல்கள், வறுமை ஆகியவற்றுக்கு எதிராக அதிரடியான தீர்வுகள், என இவரது அனல் பறக்கும் பிரச்சாரங்கள் வாக்காளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன.